என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க.ஆலோசனை கூட்டம்
    X

    தி.மு.க.ஆலோசனை கூட்டம்

    • ஆலங்குடியில் தி.மு.க.ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
    • அமைச்சர்கள் மெய்யநாதன், ரகுபதி கலந்து கொண்டனர்

    ஆலங்குடி,

    திருச்சியில் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கான பாகநிலை முகவர்கள் ஆலோசனை கூட்டம், 26ம் தேதி, திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது . இந்த கூட்டத்தில் பங்கேற்பது குறித்து ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாகநிலை முகவர்களிடையே ஆலோசனை கூட்டம் ஆலங்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சரும் தெற்கு மாவட்டச் செயலாளருமான அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். நிகழ்ச்சியில் மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் கேசவன் மாவட்டத் துணை செயலாளர் ஞான. இளங்கோவன், ஒன்றிய செயலாளர் வடிவேல், ஆலங்குடி நகர செயலாளர் பழனிகுமார், துணைசெயலாளர் செங்கோல், கீரமங்கலம் நகர செயலாளர் சிவகுமார், கவுன்சிலர்கள் கிருஷ்ணமூர்த்தி, சஷ்டிமுருகன், சையது இப்ராஹிம் ஒன்றிய துணைச் செயலாளர் முருகேசன், நேஷனல் அப்துல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×