என் மலர்
உள்ளூர் செய்திகள்

கறம்பக்குடி பகுதிகளில் குற்ற செயல்களை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம்
- கறம்பக்குடி பகுதிகளில் குற்ற செயல்களை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
- மேலும் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் பேரூராட்சி பகுதி மற்றும் அனைத்து ஊராட்சி பகுதியிலும் 100 கண்காணிப்பு கேமராக்களை வருகிற 10 ந் தேதிக்குள் பொருத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
கறம்பக்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்ற தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் காவல் நிலையத்தில் கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கறம்பக்குடி பேரூராட்சி தலைவர் மற்றும் ஒன்றியத்துக்கு உட்பட்ட 39 ஊராட்சி மன்ற தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இதில் கறம்பக்குடி பேரூராட்சி நகரப் பகுதிகளில் மற்றும் கிராமப்புற ஊராட்சிகளில் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் பணியாற்றும் போலீசாருக்கு பேரூராட்சி நிர்வாகம், ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உறுதுணையாக இருக்க வேண்டுமென காவல்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டது. மேலும் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் பேரூராட்சி பகுதி மற்றும் அனைத்து ஊராட்சி பகுதியிலும் 100 கண்காணிப்பு கேமராக்களை வருகிற 10 ந் தேதிக்குள் பொருத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.






