search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கந்தர்வகோட்டை அருகே ரூ.8.15 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணி
    X

    கந்தர்வகோட்டை அருகே ரூ.8.15 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணி

    • கந்தர்வகோட்டை அருகே ரூ.8.15 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது
    • அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், ஆற்றங்கரை வெள்ளாளவிடுதி பாலம் கட்டும் பணியினை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அடிக்கல்நாட்டி துவக்கி வைத்தார். விழாவுக்கு புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தலைமை தாங்கினார். பின்னர் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    இதன்மூலம் பொதுமக்களின் பொருளாதாரம் உயர்வதற்கு வழிவகை ஏற்படுகிறது. அதன்படி இன்றையதினம் நபார்டு 2021-22 திட்டத்தின்கீழ், ரூ.8.15 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்படவுள்ள ஆற்றங்கரை-வெள்ளாளவிடுதி பாலம் கட்டும் பணி அடிக்கல்நாட்டி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையினை தமிழ்நாடு முதலமைச்சர் நிறைவேற்றி உள்ளார். மேலும் இப்பகுதியில் உள்ள பொதுமக்களின் அடிப்படை வசதிகளான குடிநீர்வசதி, சாலைவசதி, மின்வசதி உள்ளிட்டவைகள் நிறைவேற்ற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    எனவே தமிழ்நாடு முதலமைச்சரால் செயல்படுத்தப்படும் இத்தகைய மக்கள்நலத் திட்டங்களை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி க்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், கந்தர்வ க்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், கோட்டப் பொறியாளர் நபார்டு வி.செந்தில்குமார், ஒன்றியக்குழுத் தலைவர் கார்த்திக், வட்டார வளர்ச்சி அலுவலர் சி.நளினி, மா.தமிழய்யா, ஊராட்சி மன்றத் தலைவர்கள் மா.பரமசிவம், கோ.அருணாசலம், உதவிப் பொறியாளர் நபார்டு ராஜதுரை, எம்.எம்.பாலு, ஒன்றியக்குழு கவுன்சிலர்கள் ராஜேந்திரன், திருப்பதி, முருகேசன் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


    Next Story
    ×