என் மலர்
உள்ளூர் செய்திகள்

கருவேப்புலாம்பட்டி கிராமத்திற்கு தினசரி பஸ் சேவை - அதிகாரிகள் உறுதி
- கருவேப்புலாம்பட்டி கிராமத்திற்கு தினசரி பஸ் சேவை வழங்கப்படும் என்ற பொதுமக்களிடம் அதிகாரிகள் உறுதியளித்தனர்.
- பணிமனை முற்றுகை போராட்டம்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கருவேப்புலாம்பட்டி கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பம் வசித்து வருகின்றன.
இந்நிலையில் ஊருக்கு காலை மற்றும் மாலை என 2 வேளையும் பஸ்கள் இயக்கப்படடது. காலை வரும் பேருந்தில் அதிக கூட்டம் இருப்பதால் நாள்தோறும் பள்ளி , கல்லூரி மாணவர்களும், வேலைக்குச் செல்லும் மக்கள் அதில் பயணிக்காக முடியாமல் அவதி அடைந்து வந்தனர்.
மேலும் மாலை நேரத்தில் வரும் பேருந்து கடந்து சில நாட்களாக முறையாக இயக்கப்படாமல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வருவதால் இரவு நேரங்களில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது குறித்து பலமுறை பொன்னமராவதி பேருந்து பணிமனையில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திரண்டு வந்து தினசரி பஸ்களை இயக்க வலியுறுத்தி பொன்னமராவதி போக்குவரத்து பணிமனையை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்னமராவதி காவல் ஆய்வாளர் தனபாலன் மற்றும் பணிமனை மேலாளர் ஆகியோர் பொதுமக்களிடம் இனிவரும் காலங்களில் முறையாக பேருந்து இயக்கப்படும் என பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அங்கிருந்த மக்கள் கலைந்து சென்றனர்.






