என் மலர்
உள்ளூர் செய்திகள்

அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க மாநாடு
- அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க மாநாடு நடைபெற்றது
- சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்
புதுக்கோட்டை:
கந்தர்வகோட்டையில் அகில இந்திய ஜனநாயக மாதர்சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட மாநாடு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் சுசிலா தலைமை தாங்கினார். மாநாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை தடுத்து நிறுத்த கோரியும், 100 நாள் வேலைத்திட்டத்தில் காலை 7 மணிக்கு வேலைக்கு வர வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த மாநாட்டில் மாநில பொதுச் செயலாளர் சுகந்தி, மாநிலச் செயலாளர் தமிழ்ச்செல்வி, துணைச் செயலாளர் கலைச்செல்வி, மாவட்ட செயலாளர் சலோமி, மாவட்ட பொருளாளர் பாண்டிச்செல்வி, ஒன்றிய பொறுப்பாளர்கள் கவிதா, சாந்தி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாதர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மாநாட்டு பேரணியை கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை தொடங்கி வைத்தார்.






