என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. மாநாட்டில் 30 ஆயிரம்  பேர் பங்கேற்க திட்டம்
    X

    அ.தி.மு.க. மாநாட்டில் 30 ஆயிரம் பேர் பங்கேற்க திட்டம்

    • அ.தி.மு.க. மாநாட்டிற்கு, புதுக்கோட்டையில் இருந்து 30 ஆயிரம் பேர் கலந்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு உள்ளது
    • விராலிமலையில் நடந்த ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது

    மதுரையில் 20 அன்று நடைபெற இருக்கும் மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம் விராலிமலையில் முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது . அதிமுக பொன்விழா ஆண்டை முன்னிட்டு நடைபெறும் மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம் விராலிமலை உள்ள அதிமுக தேர்தல் பணிமனை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றதுஇந்த ஆலோசனை கூட்டத்தில் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, ஊராட்சி, கிளைக் அதிமுக நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் மதுரை மாநாட்டில் விராலிமலை சட்டமன்ற தொகுதி சார்பில் 30 ஆயிரம் பேர் பங்கேற்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுமேலும் மாநாட்டிற்கு செல்ல வாகனம், உணவு இருப்பிடம் போன்றவை குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதுபின்னர் மாநாடு குறித்த விளம்பர ஸ்டிக்கர்களை வாகனகளில் ஒட்டும் பணியினை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மாவட்ட கழக அவைத்தலைவர் ராமசாமி மற்றும் ஒன்றிய நகர கழக செயலாளர் சார்பு அணி நிர்வாகிககள் உள்ளிட்ட 500க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    Next Story
    ×