என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராணி ரமாதேவி மரணம்- மு.க.ஸ்டாலின் இரங்கல்
- புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னர் ராஜகோபால் தொண்டைமானின் சகோதரர் ராதாகிருஷ்ண தொண்டைமானின் மனைவி ராணி ரமாதேவி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
- ராணி ரமாதேவியை இழந்து வாடும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னர் ராஜகோபால் தொண்டைமானின் சகோதரர் ராதாகிருஷ்ண தொண்டைமானின் மனைவியார் ராணி ரமாதேவி, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மறைவெய்திய தகவலறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story






