search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இறுதி பட்டியல் வெளியீடு; தஞ்சை மாவட்டத்தில் 20.43 லட்சம் வாக்காளர்கள்
    X

    இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டார்.

    இறுதி பட்டியல் வெளியீடு; தஞ்சை மாவட்டத்தில் 20.43 லட்சம் வாக்காளர்கள்

    • அனைத்து திருத்தங்களுக்காக 17,511 படிவங்களும் ஏற்கப்பட்டது.
    • கிராம சபை கூட்டத்தில் வாக்காளர் பட்டியலை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டார்.

    அதன்படி, மாவட்டத்தில் ஆண் வாக்காளா்கள் 9,93,844 பேரும், பெண் வாக்காளா்கள் 10,49,103 பேரும், இதர பாலினத்தவா்கள் 169 பேரும் என மொத்தம் 20,43,116 வாக்காளா்கள் உள்ளனா்.

    இதில், 2022 நவம்பா் 9ஆம் தேதி முதல் டிசம்பா் 8ஆம் தேதி வரை புதிதாக சோ்ப்பதற்கு 33,351 படிவங்களும், இறந்த, இடம் பெயா்ந்தவா்களை நீக்குவதற்கு 23,389 படிவங்களும், அனைத்து திருத்தங்களுக்காக 17,511 படிவங்களும் ஏற்கப்பட்டது.

    இந்த வாக்காளா் பட்டியல் மாவட்டத்திலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, வட்டாட்சியா் அலுவலகங்களிலும் பொதுமக்களின் பாா்வை க்காக வைக்கப்படவுள்ளது. மேலும், ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டத்திலும் வாக்காளா் பட்டியல் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்படும்.

    நிகழாண்டு முழுவதும் நடைபெறவுள்ள தொடா் திருத்தப் பணியில் 18 வயது நிறைவடைந்தவா்கள் அடுத்துவரும் நான்கு காலாண்டுகளின் மையத் தகுதிநாளில் அதாவது ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபா் 1 ஆகிய காலாண்டின் தகுதி நாளில் முன்கூட்டியே வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க படிவம் 6ஐ வட்டாட்சியா் அலுவலகத்தில் பெற்று பாஸ்போா்ட் அளவு புகைப்படம், வயது, இருப்பிடத்துக்கான ஆவண ஆதாரங்களை இணைத்து நிறைவு செய்யப்பட்ட படிவத்தை தொடா்புடைய வட்ட அலுவலகத் தோ்தல் பிரிவில் வழங்கலாம். (அல்லது) NVSP Portal என்ற இணையதளம் மற்றும் voters help line என்ற மொபைல் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

    சட்டப்பேரவை தொகுதி வாரியாக வாக்காளா்கள் விவரம்:

    திருவிடைமருதூா்

    ஆண் வாக்காளர்கள்- 1,28,359 -, பெண் வாக்காளர்கள் 1,30,839 , மூன்றாம் பாலினத்தவர் 16. மொத்தம் 2,59,214.

    கும்பகோணம்

    ஆண் வாக்காளர்கள் 1,32,152, பெண் வாக்காளர்கள்-1,39,285, மூன்றாம் பாலினத்தவர் - 17, மொத்தம் - 2,71,454.

    பாபநாசம்

    ஆண் வாக்காளர்கள்- 1,27,552, பெண் வாக்காளர்கள் - 1,33,607 , மூன்றாம் பாலினத்தவர்- 19, மொத்தம் - 2,61,178.

    திருவையாறு

    ஆண் வாக்காளர்கள் - 1,29,872, பெண் வாக்காளர்கள் - 1,36,620 , மூன்றாம் பாலினத்தவர்- 20, மொத்தம் - 2,66,512.

    தஞ்சாவூா்

    ஆண் வாக்காளர்கள்- 1,33,991 , பெண் வாக்காளர்கள்- 1,46,184, மூன்றாம் பாலினத்தவர் - 59, மொத்தம் - 2,80,234.

    ஒரத்தநாடு

    ஆண் வாக்காளர்கள் - 1,19,004, பெண் வாக்காளர்கள் - 1,26,065, மூன்றாம் பாலினத்தவர் - 5, மொத்தம் - 2,45,074.

    பட்டுக்கோட்டை

    ஆண் வாக்காளர்கள் - 1,16,604, பெண் வாக்காளர்கள் - 1,26,521 , மூன்றாம் பாலினத்தவர்- 24, மொத்தம் - 2,43,149.

    பேராவூரணி

    ஆண் வாக்காளர்கள் - 1,06,310, பெண் வாக்காளர்கள் - 1,09,103 , மூன்றாம் பாலினத்தவர்- 9, மொத்தம் - 2,16,301.

    இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியா் (வருவாய்) என்.ஓ. சுகபுத்ரா, எல்.ஜி.அண்ணா, புண்ணியமூர்த்தி (தி.மு.க) , சரவணன் ( அ.தி.மு.க ), ஜெய்சதீஷ், விநாயகம் , முரளிதரன் ( பா.ஜ.க ), மோகன்ராஜ், பழனியப்பன் ( காங்கிரஸ் ), அடைக்கலம் , லக்கி செந்தில் ( தே.மு.தி.க) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×