search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் பொதுமக்கள் தற்காப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்-தருமபுரி கலெக்டர் அறிவுறுத்தல்
    X

    வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் பொதுமக்கள் தற்காப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்-தருமபுரி கலெக்டர் அறிவுறுத்தல்

    • கால்நடைகளுக்கு தீவனங்களை வெட்ட வெளியில் போடுவதை தவிர்க்க வேண்டும்.
    • செல்லப் பிராணிகளை வெயில் காலங்களில் வாகனங்களில் தனியே விட்டுச் செல்லக் கூடாது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் கோடை தொடக்கத்திலேயே வெப்ப அலைகள் அதிகமாக இருப்பதால் வெப்பம் மற்றும் வெப்ப அலைபாதிப்புக்களை தடுக்க செய்ய வேண்டியவை வெயிலில் இருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகள் குறித்து தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி அறிவுறுத்துள்ளார்.

    இது குறித்து தருமபுரி கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    உடலின் நீர்சத்து குறையாமல் பராமரிக்கவும் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் எடுக்காவிடிலும் கூட போதுமான அளவு தண்ணீர் அருந்தவும், பயணத்தின் போது குடிநீரை பாட்டிலில் எடுத்துச் செல்ல வேண்டும். ஓ.ஆர்.எஸ். எலுமிச்சை சாறு, இளநீர், வீட்டில் தயாரித்த நீர் மோர், லஸ்ஸி, புளித்த சோற்று நீர் மற்றும் பழச்சாறுகள் பருகி நீரிழப்பைத் தவிர்க்கவும், பருவகால பழங்கள், காய்கறிகள், மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும்.

    வெயில் அதிகமாக இருக்கும் போது வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். மதிய நேரத்தில் வெளியே செல்லும் போது கண்ணாடி மற்றும் காலணி அணிந்து குடையின் பாதுகாப்புடன் செல்ல வேண்டும்.

    குழந்தைகளை வாகனங்களில் தனியே அமர்த்தி விட்டு வெளியே செல்லக் கூடாது. பருக இளநீர் போன்ற திரவங்களை கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கான வெப்பம் தொடர்பான நோய்களை எவ்வாறு கண்டறிய வேண்டும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். தனியே வசிக்கும் முதியவர்களின் உடல் நிலையை தினமும் இருமுறை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

    கால்நடைகளை நிழல் தரும் கூரை அடியில் பாதுகாப்பான முறையில் கட்டிவைக்க வேண்டும். போதுமான அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு தீவனங்களை வெட்ட வெளியில் போடுவதை தவிர்க்க வேண்டும்.

    செல்லப் பிராணிகளை வெயில் காலங்களில் வாகனங்களில் தனியே விட்டுச் செல்லக் கூடாது. கோடை வெயிலின் தாக்கத்தால் வெப்ப சலனம் ஏற்பட்டு அதன் மூலம், இடியுடன் கூடிய மழைபெய்ய வாய்புள்ளது.

    கேஸ் சிலிண்டர்களை இரவி்ல் கழற்றி வைப்பது நல்லது. விறகு அடுப்புகளை பயன்படுத்திய பிறகு தண்ணீர் ஊ அணைத்துவிட வேண்டும். மண்ணெண்ணெய் விளக்குகளை கவனமாக கையாள வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×