என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாரதி நகர் பொதுமக்கள் பரமத்தி வேலூர் -மோகனூர் சாலையில் அமர்ந்து சாலை மறியல் செய்த போது எடுத்த படம்.
பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு,
- பரமத்திவேலூரில் இருந்து மோகனூர் செல்லும் சாலையின் குறுக்கே மழை நீர் வெளியேறும் வகையில் குழாய் அமைக்கப்பட்டு இருந்தது.
- தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள், ஓலப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கனகு மயில்சாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பரமத்தி வேலூர்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள ஓலப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது பாரதி நகர். இப்பகுதியில் பரமத்திவேலூரில் இருந்து மோகனூர் செல்லும் சாலையின் குறுக்கே மழை நீர் வெளியேறும் வகையில் குழாய் அமைக்கப்பட்டு இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழைநீர் சாலையின் குறுக்கே இருந்த குழாயில் அடைப்பு ஏற்பட்டதால் மழை நீர் பாரதிநகர் பகுதியில் தேங்கி நின்றுள்ளது.
இந்த நிலையில் தேங்கிய மழை நீரை வெளியேற்றக்கோரி பாரதிநகரைச் சேர்ந்த பொதுமக்கள் திடீரென பரமத்திவேலூரில் இருந்து மோகனூர் செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள், ஓலப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கனகு மயில்சாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து குழாயில் ஏற்பட்டிருந்த அடைப்பு அகற்றப்பட்டு அப்பகுதியில் தேங்கி இருந்த மழைநீர் வெறியேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டிருந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதன் காரணமாக பரமத்திவேலூரிலிருந்து மோகனூர் செல்லும் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.






