என் மலர்
உள்ளூர் செய்திகள்

மக்கள் தொடர்பு திட்ட முகாம்
- மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.
- அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் மாரண்டப்பள்ளி ஊராட்சியை சேர்ந்த மைதாண்டப்பள்ளியில் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாம் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
முகாமில் 53 பயனாளிகளுக்கு சமுக நலபாதுகாப்பு, உழவர் பாதுகாப்பு, உட்பிரிவு பட்டா மாறுதல், பட்டா மாறுதல், வேளாண்மை துறை , தோட்டகலை துறை, புதிய குடும்ப அட்டை உள்பட ரூ.6 லட்சத்து 31 ஆயிரத்து 780 செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
ஒசூர் வருவாய் கோட்டாட்சியர் தேன்மொழி, சூளகிரி வட்டாட்சியர் அனிதா, ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை சிவராஜ் மற்றும் வருவாய் அலுவலர் ரமேஷ் , கிராம அலுவலர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story






