என் மலர்
உள்ளூர் செய்திகள்

அஞ்செட்டியில் காங்கிரஸ் சார்பில் பேரணி நடந்தபோது எடுத்த படம்
காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுகூட்டம்
- காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி மற்றும் பொது கூட்டம் நடைபெற்றது.
- பாஜக மோடி அரசு தனியார்க்கு தாரை வார்த்து மக்களுக்கு துரோகம் விளைவிப்பதுடன் கார்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி யில் தேசீய காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி மற்றும் பொது கூட்டம் நடைபெற்றது.
முன்னதாக பேரணியை கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர்.செல்லகுமார் தொடங்கிவைத்தார்.
பொதுகூட்டத்தில் அவர் பேசும்போது காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டுவந்த இந்திரா குடியிருப்பு திட்டம் மற்றும் அனைவருக்கும் இலவச காஸ் இணைப்பு போன்ற பல அரசு திட்டாங்களை பெயர் மாற்றம் செய்து புதிய பெயரில் செயல்படுத்திக் கொண்டுள்ளது.
அதே போல் காங்கிரஸ் ஆட்சியில் உருவாக்கப்பட்ட பொது நிறுவனங்கள் அனைத்தையும் பாஜக மோடி அரசு தனியார்க்கு தாரை வார்த்து மக்களுக்கு துரோகம் விளைவிப்பதுடன் கார்பெரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது என குற்றம் சாட்டினார்.
மாற்று கட்சியிலிருந்து விலகி பலர் காங்கிரசில் இணைந்தனர். புதியதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் கட்சி சால்வை அணிவித்து வரவேற்றர்.
நிகழ்ச்சியில் மாநில செயலாளர் தேன். கு. அன்வர், இளைஞர் அணி மாவட்ட தலைவர் அப்துர் ரெஹ்மான், மாவட்ட தலைவர் முரளிதரன், மகளிர் அணி மாவட்ட தலைவி சரோஜாம்மா, போன்ற பலர் கலந்துகொண்டனர்.






