என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பொதுமக்கள் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம்
  X

  பொதுமக்கள் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 8 இடங்களில் நாளை பொதுமக்கள் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.
  • பொதுமக்கள் தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து பயன்பெறலாம்.

  கிருஷ்ணகிரி,

  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) 8 இடங்களில் பொது வினியோகத் திட்டம் சம்பந்தமாக பொதுமக்கள் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.

  இது குறித்து மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது வினியோகத் திட்டத்தில் காணப்படும் குறைகளைக் களைவதற்கும், மக்களின் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும், குடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் போன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று, குறிப்பிட்ட கிராமங்களி பொது விநியோகத் திட்டம் சம்பந்தமாக பொதுமக்கள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலர்களால் நடத்தப்பட்டு வருகிறது.

  அதன்படி நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, கிருஷ்ணகிரி வட்டத்தில் கம்மம்பள்ளி தரப்பு எம்.கொல்லப்பள்ளி கிராமத்திலும், பர்கூர் தாலுகாவில் சின்னமட்டாரப்பள்ளி தரப்பு பசவண்ணகோயிலிலும், போச்சம்பள்ளி தாலுகா மகாதேவகொல்லஅள்ளி தரப்பு சாமல்பட்டியிலும், ஊத்தங்கரை தாலுகா காட்டேரி, ஓசூர் தாலுகா ஒன்னல்வாடி, சூளகிரி தாலுகா காமன்தொட்டி, தேன்கனிக்கோட்டை தாலுகா ரத்தினகிரி தரப்பு சாத்தனக்கல், அஞ்செட்டி தாலுகா அஞ்செட்டி மேற்கு தரப்பு எருமத்தனப்பள்ளியிலும் நடைபெறுகிறது.

  எனவே, மேற்படி குறைதீர்க்கும் நாளில் பொதுமக்கள் தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து பயன்பெறலாம் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  Next Story
  ×