search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் பொம்மிடி ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
    X

    போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் பொம்மிடி ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

    • பொம்மிடி பகுதியில் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசலில் பொதுமக்கள் சிக்கித் தவிக்கின்றனர். எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை சீர்ப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • பொம்மிடியில் நெடுஞ்சாலை பகுதியில் கடைகள் வாகனங்கள் செல்லும் சாலை வரை ஆக்கிரமித்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி:

    தருமபுரி மாவட்டம், பொம்மிடியில் பொ.மல்லாபுரம் பேரூராட்சி உள்ளது. இந்த பேரூராட்சியில் தர்மபுரி நெடுஞ்சாலை, சேலம் நெடுஞ்சாலை, ஓமலூர் சாலை, ரெயில் நிலையம், முக்கியகடைவீதி என 5 முனை இடங்களும் சந்திக்கும் பகுதி உள்ளது

    மிகவும் போக்குவரத்து நெரிசலில் இப்பகுதி சிக்கி அடிக்கடி விபத்துக்களை சந்தித்து வருகிறது

    பொம்மிடி அருகில் உள்ள மலை கிராமங்கள், வீராச்சியூர், பூமரத்–தூர், அக்கரவூர், வே.முத்தம்பட்டி, மணலூர், பையர் நத்தம், பில்பருத்தி என 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினமும் பொம்மிடிக்கு தங்கள் அன்றாட தேவைக்காக வந்து செல்கின்றனர்.

    பொம்மிடியில் 5-க்கும் மேற்பட்ட வங்கிகளும், முக்கிய ரெயில்கள் நின்று செல்லும் முக்கிய ரெயில் நிலையமாகவும் இருந்து வருகிறது

    இதனால் எப்போதும் மக்கள் கூட்டத்தாலும், வாகன நெரிசலும் அதிக அளவில் காணப்படுகிறது, இந்த நிலையில் நெடுஞ்சாலைக்கு சொந்தமான சாலை இடங்கள் ஆக்கிரமிப்பு கடைகள் அதிக அளவில் சாலையை ஆக்கிரமித்துள்ளனர்.

    நெடுஞ்சாலை உள்ள இடங்களை சில சமூக விரோதிகள் பிடித்து வைத்துக் கொண்டு வாடகை வசூலித்தும் வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்பு கடைகள் வாகனங்கள் செல்லும் சாலை வரை ஆக்கிர மித்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்

    இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகளும், உயிரிழப்புக்களும் ஏற்பட்டு வருகின்றனர் இது குறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கையில்

    கடந்த 10 ஆண்டுகளாக பேரூராட்சியில் அதிக அளவிலான ஆக்கிரமிப்புக் கள், சமூக விரோதிகளால் நடத்தப்பட்டு வருகின்றனர் இவர்கள் இடங்களை பிடித்து வைத்துக் கொண்டு போக்குவரத்துக்கு இடையூறாகவும், வாகனங்கள் செல்ல முடியாத அளவி லும் ஆக்கிரமிப்பு செய்து அரசு நிலங்களை வாடகைக்கு விட்டு பணம் சம்பாதித்து வருகின்றனர்

    இது குறித்து காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, பேரூ ராட்சி நிர்வாகம் என அனைவரிடமும் பல முறை முறையிட்டு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே நகர வளர்ச்சியை கருத்தில் கொண்டும் பொதுமக்களின் இடையூறுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காகவும் உடனடியாக ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×