என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓட்டப்பிடாரம் அருகே சேதமான கல் மண்டபத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
    X

    ஓட்டப்பிடாரம் அருகே சேதமான கல் மண்டபத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

    • மண்டபம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் சேதமாகி உள்ளது.
    • இந்த தெப்பக்குளத்தை பொதுமக்கள் குளிக்க பயன்படுத்தி வருகின்றனர்.

    புதியம்புத்தூர்:

    ஓட்டப்பிடாரத்தில் இருந்து கோவில்பட்டி செல்லும் சாலையில் ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்திற்கு வடபுறம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தெப்பகுளம் உள்ளது.

    இந்த தெப்பக்குளத்தில் தேங்கி நிற்கும் மழை நீரில் ஆண்டு முழுவதும் பொதுமக்கள் குளிக்க பயன்படுத்தி வருகின்றனர். இது தெப்பக்குளத்தின் தென்மேற்கு சந்திப்பில் கல்மண்டபம் 10 அடி நீளம், 10 அடி அகலத்தில் உள்ளது.

    இந்த மண்டபம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் சேதமாகி உள்ளது. இந்த இடத்தில் ரோட்டில் வளைவு உள்ளதால் இம்மண்டபம் ரோட்டை மறைத்து இருப்பதாலும் விபத்து ஏற்பட அதிகமான வாய்ப்புகள் உள்ளது.

    எனவே சேதமான மண்டபத்தை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×