என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாமல்லபுரம் பேரூராட்சி பகுதியில் அங்கன்வாடி கட்டிடத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
    X

    மாமல்லபுரம் பேரூராட்சி பகுதியில் அங்கன்வாடி கட்டிடத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

    • முறையாக பராமரிக்காததால் சுவர் விரிசல் விட்டு, சிமெண்ட் பூச்சு உதிர்ந்து காணப்படுகிறது.
    • பலமுறை புகார் கூறியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஓ.எம்.ஆர். பகுதி பவழக்காரன் சத்திரம், கங்கையம்மன் கோயில் தெருவில் உள்ள அங்கன்வாடி கட்டிடம் கடந்த 2012-2013ல் தொகுதி எம்.எல்.ஏ நிதியில் 2.50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. கட்டிடத்தை முறையாக பராமரிக்காததால் 10 ஆண்டுகளில் சுவர் விரிசல் விட்டு, சிமெண்ட் பூச்சு உதிர்ந்து காணப்படுகிறது. அருகில் தெரு விளக்கு சுவிட்ச் பாக்ஸ் திறந்த நிலையில் கிடக்கிறது. குடிநீர் தொட்டியும் பாசிப்பிடித்து கிடக்கிறது.

    அங்கன்வாடிக்கு குழந்தைகளை விடுவதற்கு வரும் தாய்மார்கள் பலமுறை புகார் கூறியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    மழைக்காலம் துவங்கும் முன் குழந்தைகள் பாதுகாப்பு கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×