என் மலர்
உள்ளூர் செய்திகள்

தலைவரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
கிராமசபை கூட்டத்தில் வரவு-செலவு கணக்கு கேட்டு முற்றுகை: போலீஸ் பாதுகாப்புடன் தீர்மானம்
- சிமெண்ட் சாலை அமைப்பதாக கூறி 7 லட்சம் ரூபாய் செலவு செய்த கணக்கை பொதுமக்கள் கேட்டனர்.
- தகராறு தொடர்பான தகவல் அறிந்து மாமல்லபுரம் போலீசார் சென்று பாதுகாப்பு அளித்தனர்
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த மணமை ஊராட்சியில் நேற்று தலைவர் செங்கேணி தலைமையில், துணைத் தலைவர் பூர்ணிமா சண்முகம் முன்னிலையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அப்போது ஜன ஜீவன்ராம் நகர், மலைமேடு இருளர் பகுதி உள்ளிட்ட சில இடங்களில் சிமெண்ட் சாலை அமைப்பதாக கூறி 7 லட்சம் ரூபாய் செலவு செய்த கணக்கை பொதுமக்கள் கேட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியதுடன், வாக்குவாதம் ஏற்பட்டது. வரவு-செலவை நீங்களே கூறுங்கள் என்று பொதுமக்களிடமே எதிர்கேள்வி கேட்டதாக கூறப்படுகிறது.
தகராறு தொடர்பான தகவல் அறிந்து மாமல்லபுரம் போலீசார் அங்கு சென்றனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன், சாலை வசதி, தெரு விளக்கு, குடிநீர் குறித்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றபட்டது. இதனால் மணமை ஊராட்சியில் பரபரப்பு நிலவியது.
Next Story






