search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் நிதி நிறுவனம் மீது பொதுமக்கள் போலீசில் புகார்
    X

    புகார் மனு அளிக்க வந்த பொதுமக்கள்.

    தனியார் நிதி நிறுவனம் மீது பொதுமக்கள் போலீசில் புகார்

    • பலமுறை நிதி நிறுவன அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை தொடர்பு கொண்டும் உரிய பதில் அளிக்கப்படவில்லை.
    • ஏமாற்றமடைந்த வணிகர்களும் மற்றும் பொதுமக்களும் தங்களது பணத்தை பெற்றுத்தருமாறு சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது.

    இந்நிதி நிறுவனத்தில் சீர்காழி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராள மான வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது பணத்தை முதலீடு செய்துள்ளனர்.

    குறிப்பிட்ட காலம் முடிந்த பிறகு தங்களது முதலீட்டை திருப்பி தருமாறு பணம் கட்டியவர்கள் கேட்ட போது நிதி நிறுவனம் திருப்பித் தராமல் காலம் தாழ்த்தியுள்ளது.

    பலமுறை நிதி நிறுவன அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை தொடர்பு கொண்டும் உரிய பதில் அளிக்கப்படவில்லை.

    இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நிதி நிறுவனம் அறிவிப்பு எதுவும் இன்றி மூடப்பட்டுள்ளது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த முதலீட்டாளர்கள் 30 க்கும் மேற்பட்டோர் வர்த்தகர்கள் பாதுகாப்பு நல சங்கத் தலைவர் ஞானமணி தலைமையில் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்த வணிகர்களும் மற்றும் பொதுமக்களும் தங்களது பணத்தை திருப்பி பெற்றுத்தருமாறு சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    பொது மக்களின் முதலீட்டை திருப்பி கொடுக்கா மல் நிதி நிறுவன ம்மூட ப்பட்ட சம்பவம் சீர்காழி யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×