என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரூ.19.52 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகள்
- மானியத்தில் இருந்து 5 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது.
- மூன்று பணிகளையும் அசோக்குமார் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து நேற்று தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அடுத்த அகசிப்பள்ளி ஊராட்சி மோட்டூர் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், 15&வது நிதிக்குழு மானியத்தில் இருந்து, 4.50 லட்சம் ரூபாய் மதிப்பில் குடிநீர் குழாய் அமைக்கப்படுகிறது. கிருஷ்ணகிரி தேவசமுத்திரம் பஞ்சாயத்து நேதாஜி நகரில் நீண்ட நாட்களாக சாக்கடைக் கால்வாய் வசதி இன்றி கழிவுநீர் சாலையில் தேங்கியுள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்கள் சாக்கடைக் கால்வாய் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கிருஷ்ணகிரி அ.தி.மு.க,., எம்.எல்.ஏ., அசோக்குமாரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர். அதன்படி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 9 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி அடுத்த பெரியமுத்தூர் கிராமத்தில், 15வது நிதிக்குழு மானியத்தில் இருந்து 5 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது. இந்த மூன்று பணிகளையும் அசோக்குமார் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து நேற்று தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர்கள் கண்ணியப்பன், சோக்காடி ராஜன், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜசேகர், முன்னாள் வங்கித் தலைவர் சின்னசாமி, கிளை செயலாளர்கள் பாண்டியன், சுப்பு, கவுன்சிலர் ரவி, மாவட்ட பிரதிநிதி மாது, வங்கி துணைத் தலைவர் ரமேஷ், கவுன்சிலர் ராதா சென்றாயன், திம்மராயன், குமார், செல்வன், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






