search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி மாவட்டத்தில் சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
    X

    வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் ரவிச்சந்திரன் பரிசு வழங்கிய போது எடுத்த படம். 

    தென்காசி மாவட்டத்தில் சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

    • போட்டியில் 450-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
    • வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நேற்று சைக்கிள் போட்டிகள் நடை பெற்றது. 13 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும், மாணவி களுக்கு 10 கிலோ மீட்டர் தூரமும், 15 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப் பட்டது.

    இதேபோல் 17 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோமீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும் நிர்ண யிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றது.

    போட்டியினை ராஜா எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார். இதில் சுமார் 450-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிச ளிப்பு நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரமும். 3-வது பரிசாக ரூ.1,000 மற்றும் 4 முதல் 10-வது பரிசு வரை ரூ.250 வீதம் காசோலையாக வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

    Next Story
    ×