என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாநில கலை திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா தலைமை ஆசிரியர் ஜோதி தலைமையில் நடைபெற்றது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு
- கலைத் திருவிழா போட்டிகள் பங்கேற்று வெற்றி பெற்றனர்.
- முன்னாள் மாணவர் ஆசிரியர் ஜோதி வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினார்.
பாப்பிரெட்டிப்பட்டி,
தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியம் தாளநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் பங்கேற்று வெற்றி பெற்றனர்.
பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர் ஆசிரியர் ஜோதி வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினார்.
இப்பள்ளியில் பயின்று பள்ளிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என மாணவர்களை ஊக்கபடுத்தி பேசினார்.
இந்த பரிசளிப்பு விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் இளங்கோவன், ஆசிரியர் பயிற்றுனர் ஆனந்தராஜ்,ஹேமாவதி ராமச்சந்திரன், ஷீலா, உள்ளிட்ட பள்ளி இருபால் ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story






