என் மலர்
உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்.
திண்டுக்கல்லில் ரூ.2000 நோட்டுகளை வாங்க மறுக்கும் தனியார் பைனான்ஸ் நிறுவனங்கள்
- நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றி க்கொள்ளலாம் என அவகாசம் அளித்துள்ளனர்.
- ஆனால் தனியார் வங்கிகள், பைனான்ஸ் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்க ளில் ரூ.2000 நோட்டுகள் வாங்க மறுப்பது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல்லில் உள்ள தனியார் வங்கிகளில் ரூ.2000 நோட்டு கொடுத்தால் வாங்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர். நாடு முழுவதும், செப்டம்பர் 30ந் தேதிக்குள் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ள லாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது 2000 ரூபாய் நோட்டுகளை வாங்குவதற்கு தனியார் பைனான்ஸ் நிறுவனங்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றன. இது பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் ரவுண்ட் ரோடு அருகே உள்ள ஒரு தனியார் பைனான்ஸ் நிறு வனத்தில் குமரன் திருநகரை சேர்ந்த மகேந்திரன் என்பவர் நகை அடகு வைத்துள்ளார். அதனை திருப்புவதற்காக இன்று சென்றுள்ளார். அப்போது அவர் கொண்டு சென்ற தொகையில் 12 நோட்டுகள் ரூ.2000 இருந்துள்ளது. இதனை தனியார் பைனா ன்ஸ் நிறுவன ஊழியர்கள் வாங்க மறுத்துள்ளனர்.
இதனால் மன உளைச்சலில் என்ன செய்வது என அறியாமல் திரும்பி வந்து விட்டார். நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றி க்கொள்ளலாம் என அவகாசம் அளித்துள்ளனர். ஆனால் தனியார் வங்கிகள், பைனான்ஸ் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்க ளில் ரூ.2000 நோட்டுகள் வாங்க மறுப்பது பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.






