என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் : 756 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது
    X

    முகாமில் கலந்து கொண்ட 756 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டபோது எடுத்த படம்.

    கிருஷ்ணகிரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் : 756 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது

    • கிருஷ்ணகிரியில் தனியார் வேலைவாயப்பு முகாம் மூலமாக 756 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
    • 102 தனியார்கள் நிறுவனங் கள் பங்கேற்றன

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார்து றையில் வேலை வாய்ப்பு முகாமை ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் சப் கலெக்டர் வந்தனா கார்க் ஆகியோர் துவக்கி வைத்துர 756 -நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர். இதில் ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்து றை இணை இயக்குநர் ஆ.லதா ஆகியோர் முன்னி லை வகித்தனர்.

    இதில் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர்ஒய்.பிரகாஷ் பேசியாதவது;- தமிழ்நாடு முதலமைச்சர் படித்த இளைஞர்கள், வேலை வாய்ப்பற்ற இளை ஞர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்க ளை செயல்படுத்தி வருகி றார்கள். அவ்வகையில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கிதர வேண்டும் என்ற அடிப்ப டையில் முதலமைச்சர் கடந்த 20.3.2022 அன்று மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமை தொ டங்கி வைத்தார்.முதலீடா ளர்கள் மாநாட்டை நடத்தி பல்வேறு நிறுவ னங்கள் அமைவதற்கு வழிவகை செய்துள்ளார்.

    அதனடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டைட்டான், டாடா எலக்ரா னிக்ஸ், டெல்டா, ஓலா மற்றும் செய்யாறு காலணி தயாரிப்பு தொழிற்சாலை துவக்கப்பட்டு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம்பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். அதேப்போல அரசு துறையில் வேலை வாய்ப்புகள் போட்டித் தேர்வுகளின் வாயிலாகவே அரசுப் பணிகளில் வேலை வாய்ப்பு சாத்தியமாகும். அரசு வேலைவாய்ப்புகள் பெற உதவும் வகையில் ஒவ்வொரு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திலும் தன்னாார்வ பயிலும் வட்டம் வாயிலாக இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

    இம்மாவட்டத்தில் நடை பெறும் இவ்வகுப்பு களில் பயிற்சி பெற்றுள்ளவர்க ளில் 2023 வரை 131 நபர்கள் அரசுப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பல்வேறு அரசு துறைகளில் பணி யாற்றி வருகிறார்கள் இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக தனியார் துறை வேலை வாய்ப்பு அரங்கு களை நடை பெற்ற இம்முகா மில் அசோக்லைலேன்ட், டி.வி.எஸ், டெல்டா, டாடா எலக்ரானிக்ஸ் உள்ளிட்ட 102 தனியார்கள் நிறுவனங் கள் பங்கேற்றனர். இம்முகா மில் 2580 நபர்கள் வேலை வாய்ப்பு முகாமில் கலந்துக் கொண்டனர். அவர்களில் 757 நபர்களுக்கு நிறுவனங் கள் சார்பில் பணி நியமன ஆணைகளை வழங்கப்பட் டது.

    Next Story
    ×