search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி அருகே மனைவியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை   கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
    X

    கோப்பு படம்

    தேனி அருகே மனைவியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

    • குடிபோதையில் மனைவி என்றும் பாராமல் தாலி கயிற்றால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.
    • மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள்தண்டனையும், ரூ.5000 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். துப்புரவு பணியாளர். இவரது மனைவி சின்னத்தாய். கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மகளிர் சுயஉதவிக்குழுவிற்கு வழங்கப்பட்ட பணத்தை செலுத்தாமல் வேல்முருகன் மதுகுடித்துவிட்டார்.

    இதனை சின்னத்தாய் கண்டித்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வேல்முருகன் மனைவி என்றும் பாராமல் தாலி கயிற்றால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்தார். உறவினர்களிடம் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டதாக நாடகமாடினார்.

    ஆனால் சின்னத்தாயின் சகோதரர் பாண்டி அளித்த புகாரின்பேரில் வேல்முருகன் மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

    இதுதொடர்பாக தேனி மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. இதனை விசாரித்த நீதிபதி சஞ்சய்பாபா மனைவியை கொலை செய்த வேல்முருகனுக்கு ஆயுள்தண்டனையும், ரூ.5000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    Next Story
    ×