search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலில் விடப்பட்ட இறால் குஞ்சுகள்-  மீன்வளத்தை அதிகரிக்க நடவடிக்கை
    X

    இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன

    கடலில் விடப்பட்ட இறால் குஞ்சுகள்- மீன்வளத்தை அதிகரிக்க நடவடிக்கை

    • இறால் குஞ்சுகள் இருந்த பெரிய கேன்கள் படகுகள் மூலம் கடலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டன.
    • 3.1 மில்லியன் பச்சை வரி இறால்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் விடப்பட்டன.

    மண்டபம்:

    பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின்படி கடலில் மீன் வளத்தை அதிகரிக்கும் விதமாக மீன் குஞ்சுகள் மற்றும் பச்சை வரி இறால்களை வளர்த்து கடலில் விடும் பணியை ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி மையம் மேற்கொண்டுள்ளது.

    இதன்படி இன்று 3.1 மில்லியன் பச்சை வரி இறால்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் விடப்பட்டன. பெரிய கேன்களில் அடைக்கப்பட்டிருந்த இறால் குஞ்சுகள், படகுகள் மூலம் கடலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டன. பின்னர் அவற்றை மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி மையத்தின் தலைவர் தமிழ்மணி தலைமையிலான அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கடலில் விட்டனர். மண்டபம் பகுதி மீனவர் சங்க தலைவர்களும் இதில் கலந்து கொண்டனர்.

    கடந்த 2022 பிப்ரவரி திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து தற்போது வரை 36.54 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகள் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடலில் விடப்பட்டுள்ளதாக மீன் வள ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மீன்வளத்தை அதிகரிக்கும் என்பதால், ராமநாதபுரம் பகுதி மீனவர்கள் நன்றி தெரிவித்தனர்.

    Next Story
    ×