search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழங்குடி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த உழைக்கும் அரசு பள்ளி ஆசிரியருக்கு குவியும் பாராட்டு
    X

    பழங்குடி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த உழைக்கும் அரசு பள்ளி ஆசிரியருக்கு குவியும் பாராட்டு

    • தருமபுரி அருகே பழங்குடி இன மக்களின் கல்வித் தரத்தை உயர்த்த உழைக்கும் அரசு பள்ளி ஆசிரியர்
    • ரூ. 5 லட்சம் செய்து கல்வி வளர்ச்சிக்கான பணிகளை செய்து வருகிறார்.

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர்நத்தம் ஊராட்சியில் பழங்குடியின சமூக மக்கள் மட்டுமே வசிக்கும் போதகாடு கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் அரசு நடுநி லைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் பணி யிடம் காலியாக உள்ள நிலையில், 6 ஆசிரி யர்கள், 2 பகுதி நேர ஆசிரியர்கள் என 8 பேர் பணியாற்றி வருகின்றனர்.

    இதில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை 127 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளிக்கு தலைமை யாசிரியர் இல்லாததால், பொறுப்பு தலைமை ஆசிரி யராக கணித பட்டதாரி ஆசிரியர் பாரதி பணியாற்றி வருகிறார்.

    இந்த பள்ளியில் முழுவ தும் பழங்குடியினர் சமூக த்தைச் சார்ந்த மாணவ, மாணவிகள் படிக்கின்ற பள்ளி என்பதால், ஆசிரியர் பாரதி பணியில் சேர்ந்த நாள் முதல் பழங்குடியின மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என எண்ணி, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

    மேலும் மாணவர்களை கணிதம் குறித்து சார்ட் மற்றும் கற்றல் உபகர ணங்களை தயார் செய்ய வைத்து, அதனை வகுப்ப றைகள் முழுவதும் காட்சிப்ப டுத்தியுள்ளார்.

    மேலும் மாணவர்கள் வகுப்பறைக்கு வந்தால், அவர்கள் வகுப்பறை விட்டு வெளியே செல்லக்கூடாது, ஆசிரியர் கற்பிக்கும் பாடத்தை கவனிக்க வேண்டும் என்ற நோக்கில் வகுப்பறை முழுவதும், சூத்திரங்கள், அட்ட வணைகள், வாய்ப்பாடுகள் போன்ற அனைத்துக்கும் ஒவ்வொரு விதமான மின்வி ளக்குகளை பொருத்தி, மாண வர்களை கவரும் வகையில் அமைத்து ள்ளார்.

    மேலும் இரண்டு கட்டிடங்களுக்கு இடையே மாணவர்கள் அமர்ந்து படிக்கவும், மதிய உணவு உண்ணும் வகையில் இரண்டு கட்டிடங்களையும் இணைத்து மேற்கூறையை அமைத்துக் கொடுத்து ள்ளார்.

    மேலும் இந்த கழிப்ப றைகளை சுகாதாரமாக வைத்துக் கொள்வதற்காக தனியாக பணியாளரை வைத்து தனது சொந்த செலவில் மாதம் ஊதியம் கொடுத்து வருகிறார்.

    இதுவறை தமது சொந்த பணம் ரூ.5 லட்சம் செலவில் பல்வேறு பணிகளை செய்து வருகிறார்.மேலும் பழங்குடியின மாணவர்கள் மத்தியில் படிப்பு ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளதாக அந்த பகுதி பொது மக்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×