search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொன்னேரி பகுதியில் ஏரி நீரை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் திடீர் தள்ளிவைப்பு
    X

    பொன்னேரி பகுதியில் ஏரி நீரை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் திடீர் தள்ளிவைப்பு

    • வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட பட்டியலில் இறந்து போனவர்களின் பெயர்கள் இடம் பெற்றதாக மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
    • பிரச்சினை உள்ள 12 பகுதிகளில் தேர்தலை தள்ளி வைக்க கோரினர்.

    பொன்னேரி:

    பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட 123 ஏரிகளுக்கான ஏரி நீரை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் இன்று நடைபெற இருந்தது. இதற்காக வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு தேர்தலில் போட்டியிடுபவருக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.

    இந்த நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட பட்டியலில் இறந்து போனவர்களின் பெயர்களும் விவசாயம் மேற்கொள்ளாத பட்டா இல்லாத நபர்களின் பெயர்களும் இடம் பெற்றதாக விவசாயிகள் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

    மேலும் பிரச்சினை உள்ள 12 பகுதிகளில் தேர்தலை தள்ளி வைக்க கோரினர்.

    இதையடுத்து 12 ஏரி பகுதிகளில் நீரை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான நோட்டீஸ் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது. அதில் பொன்னேரி கோட்டத்தில் கீழ்கண்ட கிராமங்களில் ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தேர்தல் சில நிர்வாக காரணங்களால் தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுகிறது என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

    இலவம்பேடு ஏரி பெரிய மற்றும் சிறிய ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்கம், ஒன்பாக்கம் ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்கம், ஆத்ரேய மங்கலம் பெரிய மற்றும் சிறிய ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்கம், வேலூர் அம்மனேரி மற்றும் பள்ள ஏரி பெரிய மற்றும் சிறிய ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்கம், பள்ளிப்பாளையம் ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்கம், சிறுளப்பாக்கம் பெரிய மற்றும் சிறிய ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்கம்.

    ஆரணி ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்கம், சின்னம்பேடு பெரிய ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்கம், குமார சிறுளப்பாக்கம் ஏரி நீரினை பயன்படுத்துவோர் சங்கம், சேகண்யம் பெரிய ஏரி மற்றும் சித்தேரி நீரினைப் பயன்படுத்துவோர் சங்கம், உப்புநெல்வாய் ஏரி நீரினைப் பயன்படுத்துவோர் சங்கம், வழுதலம்பேடு பெரிய மற்றும் சிறிய ஏரி நீரினைப் பயன்படுத்துவோர் சங்கம் ஆகிய சங்க தேர்தல் தள்ளி வைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×