என் மலர்
உள்ளூர் செய்திகள்
பொன்னேரி எல்.இ.எப். ஈடன் மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழா
- சிறப்பு விருந்தினராக சுரேஷ் மார்க்கஸ், மின்னி பிரிசில்லா கலந்துகொண்டனர்.
- பெற்றோர்களுக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
பொன்னேரி:
பொன்னேரி எல்.இ.எப். ஈடன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழா, பொன்னேரி அடுத்த சின்ன காவனம் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சுரேஷ் மார்க்கஸ், மின்னி பிரிசில்லா ஆகியோர் கலந்துகொண்டு, விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்களையும்,, சான்றிதழ்களையும், பரிசுகளையும் வழங்கினர். மேலும், பெற்றோர்களுக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் சுகந்தாமணி, பள்ளியின் முதல்வர் தங்கமணி மற்றும் பாஸ்டர் ஜேம்ஸ் பள்ளி மாணவர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story








