என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரத்தில் பொங்குதமிழ்ச் சங்கம் சார்பில் 7 நூல்கள்: நீதிபதி ப.உ.செம்மல் வெளியிட்டார்
- கவிஞர்கள், எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
- பொதுச்செயலாளர் பொன் ஆதவன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கத்தின் ஐம்பெரும் விழா நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல் பங்கேற்று, தமிழ் இலக்கிய வரலாறு, செந்தமிழ் வளர்க்கும் பொங்கு தமிழ்ச்சங்கம், செல்லமே, இரட்டனைக் கலம்பகம், திருக்குறள் உரை, தொகுப்பு, ஆய்வு ஆகிய 7 நூல்களை வெளியிட்டார்.
சங்க தலைவர் சுந்தரபழனியப்பன் முன்னிலையில் கவிஞர்கள், எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு, மரக்கன்றுகள் நடப்பட்டது. பொதுச்செயலாளர் பொன் ஆதவன், செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பாளர் ஆலை வர்மன், மற்றும் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Next Story






