என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையம் அருகே பொங்கல் விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா
    X

    போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய காட்சி

    கடையம் அருகே பொங்கல் விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா

    • கடையம் அருகே உள்ள வெய்க்காலிப்பட்டி ராமசாமி கோவில் திடலில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
    • பரிசளிப்பு விழாவிற்கு சரவணன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    கடையம்:

    கடையம் அருகே உள்ள வெய்க்காலிப்பட்டி ராமசாமி கோவில் திடலில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. விழாவில் சிறுவர், சிறுமிகளுக்கான பலூன் உடைத்தல், ஓட்டப்பந்தயம், கோலம் போடுதல், மற்றும் வாலிபர்களுக்கான விளையாட்டுகள் உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு சரவணன் மற்றும் கிருஷ்ணன் தலைமை தாங்கினர். கடையம் பெரும்பத்து ஊராட்சி மன்ற தலை வர் பொன் ஷீலா பரமசிவன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசினை வழங்கினார். இதில் கடையம் பெரும்பத்து தி.மு.க. நிர்வாகி பரமசிவன் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×