என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொப்பிடி சின்னக்கா கோவிலில் பொங்கல் விழா
- சின்னக்கா கோவில் 14-ம் ஆண்டு பொங்கல் திருவிழா நடைப்பெற்றது.
- ஆடு, கோழி பலியிட்டும் தங்கள் நேர்த்திகடனை செலுத்தி அம்மனை வழிபட்டனர்.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே எர்ரனஅள்ளி ஊராட்சி பொப்பிடியில் அமைந்துள்ள பொப்பிடி சின்னக்கா கோவில் 14-ம் ஆண்டு பொங்கல் திருவிழா நடைப்பெற்றது.
இதனையொட்டி அம்மனுக்கு அதிகாலை முதலே பல்வேறு திரவியங்களால் அபிேஷேகம், ஆராதனை செய்யப்பட்டு, பூக்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
பொப்பிடி, சென்னப்பன் கொட்டாய், பூனையன் கொட்டாய், நிலகுண்டஅள்ளி, சாமியார் நகர், ரெட்டியூரான் கொட்டாய், கூசுக்கல், முத்துகவுண்டன்காடு ஆகிய 8 கிராம மக்கள் ஒன்றினைந்து மாவிளக்கு தட்டு எடுத்து தாரை தப்பட்டையுடன் ஊர்வலமாக சென்றும், ஆடு, கோழி பலியிட்டும் தங்கள் நேர்த்திகடனை செலுத்தி அம்மனை வழிபட்டனர்.
விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கோவில் விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.






