என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அறிஞர் அண்ணா கல்லூரியில்  பொங்கல் விழா
    X

    அறிஞர் அண்ணா கல்லூரியில் பொங்கல் விழா

    • பொய்க்கால் குதிரை ஆட்டம் நிகழ்த்திய ஏகலைவன் கலை குழுவினருக்கு பரிசு களை வழங்கினார்.
    • மாணவ, மாணவிகள் எதிர்மறை எண்ணங்களை அழித்து, புதிய எண்ணங்களை பொங்கல் திருநாள் முதல் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகே போலுப்பள்ளியில் உள்ள அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

    விழாவில் வேளாங் கண்ணி கல்வி குழுமத்தின் அறங்காவலரும், அறிஞர் அண்ணா கல்லூரியின் தாளாளருமான கூத்தரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான பரதநாட்டியம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் நிகழ்த்திய ஏகலைவன் கலை குழுவினருக்கு பரிசு களை வழங்கினார்.

    அதேபோல அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கபடி, கோலம் , சிலம்பாட்டம், தப்பாட்டம், நடனம் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி களை பாராட்டி, பரிசுகளை வழங்கினார்.

    அறிஞர் அண்ணா கல்லூரி முதல்வர் தனபால் தனது பொங்கல் வாழ்த்துரையில் மாணவ, மாணவிகள் எதிர்மறை எண்ணங்களை அழித்து, புதிய எண்ணங்களை பொங்கல் திருநாள் முதல் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    அனைவருக்கும் உதவிடம் மனப்பான்மையை பொங்கல் விழா மூலம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார். விழாவில மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து மகிழ்ச்சியுடன் பண்டிகையை கொண்டாடினார்கள். இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×