என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஓ.பி.எஸ். வீட்டில் திருட்டு குற்றவாளிகளை தேடும் தனிப்படை போலீசார்
  X

  கோப்பு படம்

  ஓ.பி.எஸ். வீட்டில் திருட்டு குற்றவாளிகளை தேடும் தனிப்படை போலீசார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் கொள்ளைபோனது.
  • டி.எஸ்.பி. தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

  பெரியகுளம்:

  தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீடு உள்ளது. இந்த வீட்டின் கீழ் உள்ள 2 அறைகளில் ஓ.பன்னீர்செல்வம் பார்வையாளர்களை சந்திப்பதற்கும், முக்கிய நபர்களுடன் ஆலோசனை நடத்துவதற்கும் பயன்படுத்தி வருகிறார்.

  வீட்டின் மாடியில் அவர் தனியாக ஓய்வெடுக்க அறை உள்ளது. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனை பயன்படுத்தி மர்ம நபர்கள் பின்புற சுவர் வழியாக ஏறி குதித்து வீட்டுக்குள் புகுந்தனர்.

  அங்கு பணம், நகை ஏதாவது உள்ளதா? என தேடினர். ஆனால் எதுவும் சிக்க வில்லை. இதனால் ஏமாற்றமடைந்த அவர்கள் சுவரில் மாட்டியிருந்த 54 இன்ச் டி.வி.யை மட்டும் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர். பாதுகாவலர்கள் மறு நாள் மாடிக்கு சென்ற போது டி.வி. திருடப்பட்டது தெரிய வந்தது.

  இது குறித்து தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு வந்து தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

  டி.எஸ்.பி. கீதா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். பொருட்களை திருடுவதற்காக பண்ணை வீட்டுக்குள் புகுந்தனரா? அல்லது வேறு எதையும் தேடி வந்தனரா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

  Next Story
  ×