என் மலர்
உள்ளூர் செய்திகள்

காவல்துறை சார்பில் குறைதீர்க்கும் முகாம்
- வெண்ணாம்பட்டியில் உள்ள காவலர் திருமண மண்டபத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்திற்கு மாவட்ட எஸ்பி கலைச்செல்வன், தலைமை வகித்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, அரூர், ஆகிய 4 உட்கோட்ட காவல் சரகம் உள்ளது.
இந்த காவல் சரக்கத்தில் 29 காவல் நிலையங்கள் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு நில அபகரிப்பு பிரிவு உள்ளிட்ட காவல் நிலையங்கள் உள்ளது.
இந்த காவல் நிலையங்களில் பல நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்வு காண்பதற்காக நேற்று தருமபுரி வெண்ணாம்பட்டியில் உள்ள காவலர் திருமண மண்டபத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு மாவட்ட எஸ்பி கலைச்செல்வன், தலைமை வகித்தார். ஏ.டி.எஸ்.பி.க்கள் அண்ணாமலை, இளங்கோவன், டி.எஸ்.பி.கள் ஸ்ரீதரன், ரவிக்குமார், புகழேந்தி, கணேஷ், ராதாகிருஷ்ணன், ஆகியோர் பொதுமக்களின் மனுக்கள் மீது விசாரணை நடத்தினர்.
குடும்பப் பிரச்சினை, நிலப்பிரச்சினை, முன்விரோதம் உள்ளிட்ட 60 மனுக்கள் மீது விசாரித்து நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்பட்டது.






