search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிலப்பிரச்சனை மோதலால் போலீஸ் குவிப்பு
    X

    நிலப்பிரச்சனை மோதலால் போலீஸ் குவிப்பு

    • நல்லம்பள்ளி தாசில்தார் ஆறுமுகம் ஆகியோர், அனைத்து தரப்பினர் இடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
    • இங்கு வந்து வழிபடவும், இந்த இடத்தை சொந்தம் கொண்டாவும் யாருக்கும் உரிமை இல்லை.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், இண்டூரில், 2 பேரிடம் இருந்து அதே பகுதியை சேர்ந்த சிலர் இடத்தை வாங்கியுள்ளனர்.

    இந்த நிலையில், இப்பகுதியில் உள்ள, பல சென்ட் நிலம் தங்களது வழிபாட்டு தளம் எனவும், இதற்கு சென்று வர, பிறர் வாங்கி வழித்தடத்தில் உரிமை உள்ளது என, கோரி வந்தனர்.

    இது தொடர்பாக, தருமபுரி டி.ஆர்.ஓ., அனிதா தலைமையில் நடந்த விசாரணையில், இந்த இடம், 108 ஆண்டுகளுக்கு முன் தருமபுரியை சேர்ந்தவருக்கு சொந்தமானது. இதில், பிறருக்கு பாத்தியம் இல்லை என உத்தரவிட்டார்.

    மேலும், இது தொடர்பாக, இந்த பகுதியில் நிலம் வாங்கியவர்கள், வழிபாடு செய்பவர்கள் தங்களுக்கு இதில், எதிர்ப்பு இருந்தால் நீதிமன்றத்தை நாடலாம் என அறிவுறுத்தி இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று, பிரச்சனைக்கு உரிய இடத்தில், வழிபாடு செய்ய ஒரு தரப்பினர் முடிவு செய்தனர். இதனால், சட்டம் ஒழுங்கு பாதிக்கும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து, பென்னாகரம் டி.எஸ்.பி., இமயவர்மன் தலைமையில், இண்டூர், பாப்பாரப்பட்டி போலீஸ் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர்.

    இரு தரப்பினரிடம், டி.எஸ்.பி., இமயவர்மன், நல்லம்பள்ளி தாசில்தார் ஆறுமுகம் ஆகியோர், அனைத்து தரப்பினர் இடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    இதில், டி.ஆர்.ஓ., உத்தரவுபடி இந்த இடம் தருமபுரியை சேர்ந்தவருக்கு சொந்தமானது ஆகும். எனவே, இங்கு வந்து வழிபடவும், இந்த இடத்தை சொந்தம் கொண்டாவும் யாருக்கும் உரிமை இல்லை.

    இந்த இடம் உங்களுக்கு சொந்தமானது என்றால், டி.ஆர்.ஓ., அறிவுரைபடி செயல்பட வேண்டும். அதுவரை, இந்த இடத்துக்கு யாரும் சொந்தம் கொண்டாட கூடாது.

    இங்கு வரக்கூடாது என, அறிவுறுத்தினார்கள். இதையடுத்து, அனைத்து தரப்பினரும் அங்கிருந்து சென்றனர். ேமலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×