என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மணலி புதுநகரில் பா.ம.க. பொதுக்குழு கூட்டம்
  X

  மணலி புதுநகரில் பா.ம.க. பொதுக்குழு கூட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் 15-வது வட்ட பூபதி, குபேந்திரன், நடராஜன், துலுக்காணம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
  • பல்வேறு இடங்களில் பா.ம. க. கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

  பொன்னேரி:

  மணலி புதுநகரில் திருவள்ளூர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சென்னை மாநகராட்சி 15-வது வட்ட பா. ம.க. பொதுக்குழு கூட்டம், வட்டச்செயலாளர் கார்த்திக் ராம் தலைமையில் நடைபெற்றது.

  இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் கே.ஏ. ரமேஷ் கலந்துகொண்டு கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.

  தொடர்ந்து பசுமைத் தாயகம் நாள், பா.ம.க. வின் 34-ம் ஆண்டு தொடக்கம், வன்னியர் சங்கத்தின் 43-ம் ஆண்டு ஆகியவை முப்பெரும் விழாவாக வடக்கு மாவட்டம் சார்பில் 2022 ஆண்டு முழுவதும் கொண்டாடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. பின்னர் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. போதைப்பொருளுக்கு எதிராக டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மேற்கொண்டு வரும் அறப்போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் வருகின்ற 30-ந்தேதி ஒருங்கிணைந்த மாவட்ட வருவாய் அலுவலகங்கள் முன்பாக நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளானோர் கலந்து கொள்வது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  கூட்டத்தில் 15-வது வட்ட பூபதி, குபேந்திரன், நடராஜன், துலுக்காணம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் பா.ம. க. கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

  Next Story
  ×