என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேர்வில் தேர்ச்சி பெறாத பிளஸ்-2 மாணவி மாயம்
- மனமுடைந்த காணப்பட்ட அவர் நேற்று காலை பள்ளி வரை சென்றுவருவதாக கூறிவிட்டு வெளியே சென்றார்,
- பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்ைல. இதனால் பெற்றோர் போலீசில் புகார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் கொவங்ககரப்பட்டி, வேப்பமரத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது40). இவரது மனைவி வெண்ணிலா. இவர்களுக்கு வினோதினி (17) உள்பட 2 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர்.
இந்த நிலையில் கட்டிட தொழிலாளியான கணவன்-மனைவி இருவரும் சேலம் மாவட்டம் சங்ககிரியில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இதனால் குழந்தைகளை மாரியப்பன் வேப்பமரத்தூரில் உள்ள தனது மாமியார் பாதுகாப்பில் விட்டு சென்றுள்ளார்.
இந்த நிலையில் மாரியப்பன் மூத்த மகள் வினோதினி வே.முத்தம்பட்டி அரசு பள்ளியில் பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பிளஸ்-2 வகுப்பிற்கு தேர்வு முடிவுகள் வெளியாகின.
இதில் வினோதினி தேர்ச்சிய அடையவில்லை. இதனால் மனமுடைந்த காணப்பட்ட அவர் நேற்று காலை பள்ளி வரை சென்றுவருவதாக கூறிவிட்டு வெளியே ெசன்றார். ஆனால் அவர் மீண்டும் வீடு திரும்பி வரவில்லை.
இதுகுறித்து மாணவியின் தங்ைக பெற்றோருக்கு போனில் தகவல் தெரிவித்தார். உடனே வேப்பமரத்தூருக்கு வந்த பெற்றோர் மாணவியை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடி–பார்த்தார். எங்கும் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து மாரியப்பன் பொம்மிடி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






