search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானது பி.இ., பி.டெக் என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பப்பதிவு தொடங்கியது
    X

    பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானது பி.இ., பி.டெக் என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பப்பதிவு தொடங்கியது

    பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானது பி.இ., பி.டெக் என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பப்பதிவு தொடங்கியது, சிறப்பு மையங்களில் மாணவ- மாணவிகள் திரண்டனர்.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு உயர்கல்வித்துறை, தொழில் நுட்ப கல்வி இயக்கத்தின் கீழ் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். போன்ற படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கியது. இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள 110 சிறப்பு உதவி மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.

    இதன் அடிப்படையில் சேலம் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரி நூலக கட்டிட வளாகத்தில் சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதுபோல் வனவாசி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியிலும் மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவேற்ற சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த சிறப்பு மையங்களில் இன்று முதல் காலை கம்ப்யூட்டர் வழியாக விண்ணப்பப் பதிவு தொடங்கியது. குறிப்பாக, காலை 9.30 மணி அளவில் பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டவுடன் சிறப்பு மையங்களில் மாணவ- மாணவிகளின் வருகை அதிகமாக உள்ளது.

    மாநகர் பகுதியில் வசிக்கும் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகள் அசல் மற்றும் நகல் கல்வி சான்றுகள், 10, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றுகள், ஆதார்கார்டு, சாதி சான்றிதழ் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தங்களது பெற்றோருடன் இந்த மையங்களில் திரண்டுள்ளனர்.

    என்ஜினீயரிங் படிப்புகளில் சேர வேண்டி அவர்கள் வரிசையாக நின்று ஆர்வத்துடன் என்ஜினீயரிங் படிப்புக்கு தங்களது விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

    அதுபோல், பிளஸ்-2 தேர்வு முடிவு ெவளியானவுடன் எடப்பாடி, கொளத்தூர் மேட்டூர், மேச்சேரி, ஓமலூர், தாரமங்கலம், நங்கவள்ளி, ஜலகண்டாபுரம், வாழப்பாடி, ஏத்தாப்பூர், ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, ஏற்காடு, வீராணம், வீரபாண்டி, காகாபாளையம், இடங்கணசாலை, சித்தர் கோவில், மகுடஞ்சாவடி, சங்ககிரி, தேவூர், இளம்பிள்ளை உள்ளிட்ட தொலை தூரத்தில் உள்ள மாணவ- மாணவிகள் பஸ்களில் புறப்பட்டு சிறப்பு மையங்களுக்கு தங்களது பெற்றோருடன் படையெடுத்தபடி உள்ளனர். இதனால் சிறப்பு மையங்களில் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் டோக்கன் வழங்கப்பட்டு விண்ணப்பதிவு நடைபெற்று வருகிறது.

    இந்த மையங்கள் மாலை 5 மணி வரை செயல்படும். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் (ஜூலை) 19-ந் தேதி ஆகும். விண்ணப்பதாரர்கள் https://tneaonline.org/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பப்பதிவை மேற்கொள்ளலாம்.

    Next Story
    ×