என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி
    X

    பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி

    • முகாம் அலுவலராக ஓசூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) கோவிந்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • விடைத்தாள் திருத்தும் பணிகள் நாளை (10-ந் தேதி) திங்கட்கிழமை தொடங்கி வரும் 21-ந் தேதி நிறைவடைகிறது.

    கிருஷ்ணகிரி,

    தமிழகத்தில் பிளஸ்2 அரசு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 13-ந் தேதி தொடங்கி கடந்த 3-ந் தேதி நிறைவடைந்தது.

    இந்த மாவட்டத்தில் நடந்த பிளஸ்-2 பொதுத் தேர்வு விடைத்தாள்கள் சேகரித்து வைக்கப்பட்டு, பள்ளிக் கல்வித்துறை இயக்கு நரகம் குறிப்பிட்ட வேறு மாவட்ட ங்களில் உள்ள விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகா ப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி மாவட்ட த்தில் கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஓசூர் ஆர்.வி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 விடைத்தாள் திருத்தும் மையங்கள் உள்ளன.

    இங்கு மற்ற மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்டு, பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்ட விடைத்தாள்களுக்கு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மையத்திற்கு முகாம் அலுவலராக கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) மணிமேகலை, ஓசூர் ஆர்.வி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்திற்கு முகாம் அலுவலராக ஓசூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) கோவிந்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணிகள் நாளை (10-ந் தேதி) திங்கட்கிழமை தொடங்கி வரும் 21-ந் தேதி நிறைவடைகிறது.

    இந்த விடைத்தாள் திருத்தும் பணியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றி வரும் முதுகலை ஆசியர்கள் மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றி வரும் முதுகலை ஆசிரியர்கள் என மொத்தம், 544 ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர்.

    இந்த இரண்டு மையங்களிலும் மதிப்பெண் சரிப்பார்க்கும் அலுவலர்கள் 6பேர், உதவியாளர்கள் 6 பேர், முகாம் எழுத்தர் 12 பேர், மதிப்பெண் குறியீட்டாளர் 12 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×