என் மலர்
உள்ளூர் செய்திகள்

பிளஸ்-1 மாணவி மாயம்
- காலையில் எழுந்து பார்த்தபோது சிறுமியை காணவில்லை.
- பதறிப்போன சிறுமியின் பெற்றோர் அவரை பல இடங்களில் தேடிபார்த்தனர்
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் கோபிநாதம்பட்டி பறையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி. இவர் அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று சிறுமி தனது குடும்பத்துடன் மலையனூரில் உள்ள கோவிலுக்கு சென்று வந்தனர். பின்னர் இரவு வீட்டிற்கு வந்த அனைவரும் தூங்க சென்றனர். காலையில் எழுந்து பார்த்தபோது சிறுமியை காணவில்லை. இதனால் பதறிப்போன சிறுமியின் பெற்றோர் அவரை பல இடங்களில் தேடிபார்த்தனர். எங்கும் தேடியும் சிறுமி கிடைக்காததால் மாயமானது தெரியவந்தது. இது குறித்து சிறுமியின் தாயார் கோபிநாதம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுமியை தேடிவருகின்றனர்.
Next Story