என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பாவூர்சத்திரத்தில் பிளஸ்-1 மாணவி தற்கொலை
  X

  பாவூர்சத்திரத்தில் பிளஸ்-1 மாணவி தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடந்த சில நாட்களாக சுருதி அதிகமாக செல்போன் பயன்படுத்தி வந்ததாகவும், அதனை அவரது தாயார் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
  • பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  தென்காசி:

  தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் மேலப்பாவூர் போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் மாரி செல்வன். இவர் நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

  இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களது மகள் சுருதி(வயது 17). இவர் பிளஸ்-1 ஆண்டு இறுதி தேர்வு எழுதி முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

  கடந்த சில நாட்களாக அவர் அதிகமாக செல்போன் பயன்படுத்தி வந்ததாகவும், அதனை அவரது தாயார் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், கடந்த 18-ந்தேதி சுருதி திடீரென வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த விஷ மருந்தை குடித்து மயங்கிக் கிடந்தார்.

  இதைக்கண்ட அவரது தாயார் கலைச்செல்வி அவரை மீட்டு தென்காசியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

  அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் சுருதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×