search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காட்டேரி பூங்காவில் 1 லட்சத்து 90 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவு
    X

    காட்டேரி பூங்காவில் 1 லட்சத்து 90 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவு

    • பூங்காவில் 2-வது சீசன் பருவத்திற்கான மலர் செடிகள், நாற்றுகள் நடவு செய்யும் பணி தொடங்கியது.
    • இரட்டை அடுக்கு டேலியாவில், லட்சுமி, பாலா, சச்சின், இந்திரா உள்ளிட்ட 75 வகையான மலா் செடி ரகங்கள் நடவு செய்யப்பட்டுள்ளது.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் 2-வது சீசன் பருவத்திற்கான மலர் செடிகள், நாற்றுகள் நடவு செய்யும் பணியினை தோட்டக்கலைத்துறை இயக்குனர் ஷிபிலா மேரி தொடங்கி வைத்தார்.

    இதில் பெடுனியா, ஆன்டிரினம், பால்சம், பெகோனியா, டையான்தஸ், பேன்சி, சால்வியா, அலிசம், ஜினியா, மேரி கோல்டு, பிரஞ்ச் மற்றும் ஒற்றை மற்றும் இரட்டை அடுக்கு டேலியாவில், லட்சுமி, பாலா, சச்சின், இந்திரா உள்ளிட்ட 75 வகையான மலா் செடி ரகங்கள் நடவு செய்யப்பட்டுள்ளது.

    இதுதவிர அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், நெதர்லாந்து நாடுகளை தாயகமாக கொண்ட டேலியா, சால்வியா, பிளாக்ஸ், ஜின்னியா, பெகோனியா, பேன்சி, டெல்பினியம், ஜெரானியம், பெட்டுனியா, ஸ்டாக்ஸ், ஸ்வீட்வில்லியம் உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள விதைகளின் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு லட்சத்து 90 ஆயிரம் மலா் நாற்றுகள் நடவு செய்யும் பணிகள் தொடங்கின.

    மொத்தம் பூங்காவில் 1 லட்சத்து 90 ஆயிரம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு வருகிறது.

    இதில் தோட்டக்கலை உதவி இயக்குநா் ராதாகிருஷ்ணன், நாக நந்தினி, மேலாளர்(பொ) லட்சுமணன, நேசமணி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

    Next Story
    ×