என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பாலக்கோடு அருகே பரிதாபம்: மின்சாரம் தாக்கி பெண் தொழிலாளி பலி- காப்பாற்ற முயன்ற கணவரும் உயிரிழந்தார்
  X

  பாலக்கோடு அருகே பரிதாபம்: மின்சாரம் தாக்கி பெண் தொழிலாளி பலி- காப்பாற்ற முயன்ற கணவரும் உயிரிழந்தார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மின்சாரம் பாய்ந்து இறந்தது தெரியாமல் கந்தம்மாள் மயங்கி கிடப்பதாக நினைத்து கணவர் உடலை தொட்டு எழுப்ப முயன்றுள்ள போது அவரையும் மின்சாரம் தாக்கியது.
  • 2 பேரும் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

  தருமபுரி,

  தருமபுரி அருகேயுள்ள மகேந்திரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 64). இவரது மனைவி கந்தம்மாள்(60). இருவரும் கூடைபின்னும் தொழிலாளிகள். இவர்களது வீட்டில் மாடி உள்ளது. அதில் தகர கொட்டகை அமைத்துள்ளனர்.

  இந்த மாடியில் ஏறுவதற்கு படிகள் இல்லை என்று கூறப்படுகிறது.பக்கத்தில் உள்ள ஒரு மரத்தின் கிளைகள் மீது ஏறித்தான் மாடிக்கு செல்ல வேண்டும்.

  இந்நிலையில் கந்தம்மாள் அந்த மரத்தின் மூலம் மாடிக்கு சென்று சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

  அப்போது மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த ஒயரில் அவரது கை பட்டுள்ளது.

  இதில் கந்தம்மாள் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். கந்தம்மாளை வெகு நேரமாக காணவில்லை என்று தேடி வந்த கந்தசாமி தனது மனைவியின் செல்போனுக்கு அழைத்துள்ளார்.

  அப்போது மாடியிலிருந்து ரிங் சத்தம் கேட்டுள்ளது. இதனால் கந்தசாமியும் மாடிக்கு சென்றுள்ளார்.

  அங்கு கந்தம்மாள் பிணமாக கிடப்பதை பார்த்துள்ளார். அவர் மின்சாரம் பாய்ந்து இறந்தது தெரியாமல் கந்தம்மாள் மயங்கி கிடப்பதாக நினைத்து அவரது உடலை தொட்டு எழுப்ப முயன்றுள்ளார்.

  அப்போது கந்தசாமி மீதும் மின்சாரம் பாய்ந்து அவரும் உயிரிழந்தார். இவர்கள் இருவரும் உயிரிழந்தது அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு தெரியவில்லை.

  நேற்று அதே பகுதியில் சற்று தள்ளி வசித்துவரும் கந்தசாமியின் மகன் அரியப்பன் வந்து அவரும் செல்போனுக்கு அழைப்பு விடுத்து மாடியிலிருந்து சத்தம் கேட்டதை கண்டு மேலே சென்று பார்த்து 2 பேரும் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து மகேந்திரமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

  இதையடுத்து போலீசார் விரைந்து வந்து உடல்களை கைப்பற்றி தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொன்று சென்றனர்.

  இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×