search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் பெட்ரோல் தட்டுப்பாடு-வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
    X

    கோவையில் பெட்ரோல் தட்டுப்பாடு-வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

    • நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக திகழ்பவை எரிபொருட்கள் தான்.
    • கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

    கோவை:

    நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக திகழ்பவை எரிபொருட்கள் தான். மோட்டார் வாகனப் போக்குவரத்தில் தொடங்கி தொழிற்சாலைகள் வரை அனைத்துக்கும் எரிபொருட்கள் தான் முக்கிய ஆதாரமாக உள்ளது.

    ஆனால், எரிபொருள் விலை இதுவரை இல்லாத வகையில் அபரிமிதமாக அதிகரித்து வருகிறது. பெட்ரோல் டீசலை ஜி.எஸ்.டி வரிக்குள் கொண்டு வரவேண்டும்.

    எரிபொருள் விலையை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

    இதனிடையே கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக கடந்த வாரம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு காரணமாக வாகனங்கள் முதல் தொழிற்சாலைகள் வரை அனைத்தின் இயக்கமும் பாதிக்கப்படும்.

    டீசல் தட்டுப்பாடு காரணமாக விவசாயம், மீன்பிடி உள்ளிட்ட தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு தொடரும் பட்சத்தில் அது நாட்டின் உற்பத்தியையும், அதன் மூலமாக பொருளாதார வளர்ச்சியையும் கடுமையாக பாதிக்கும்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வால்பாறையில் பெட் ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டது. அங்குள்ள 2 பங்குகளிலும் எரிபொருள் தீர்ந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

    இதனிடையே கோவை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் உள்ள பங்குகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள பங்குகளில் இருசக்கர வாகனங்களுக்கு ரூ.200 முதல் ரூ.300 வரை மட்டும் பெட்ரோல் போடப்படுகிறது. கார்களுக்கு ரூ.500 வரை மட்டுமே எரிபொருள் நிரப்பப்படுகிறது.

    ஒரு சில பங்குகளில் எரிபொருள் இல்லை என்ற அறிவிப்பு பலகையே வைக்கப்பட்டுள்ளது. இப்படியே சென்றால் எரிபொருள் கிடைக்காமல் மக்கள் அவதியடையும் நிலை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    பெட்ரோலிய நிறுவனங்கள் குறித்த நேரத்தில் எரிபொருள் சப்ளை செய்யாமல் இருப்பதே இந்த தட்டு ப்பாடுக்கு காரணம் என்று பங்கு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் அவர்கள் எதனால் எரிபொருள் சப்ளையை நிறுத்தி வைத்துள்ளனர் என்பது குறித்து தெரியவில்லை என்றனர்.

    Next Story
    ×