search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காயல்பட்டினத்தில் 11 கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி ஆணையரிடம் மனு- முஸ்லிம் லீக் சார்பில் வழங்கப்பட்டது
    X

    நகராட்சி ஆணையாளர் சுகந்தியிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்ட போது எடுத்த படம்.

    காயல்பட்டினத்தில் 11 கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி ஆணையரிடம் மனு- முஸ்லிம் லீக் சார்பில் வழங்கப்பட்டது

    • நகரில் குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளை அகற்றி, தரமான புதிய தார் சாலைகளை அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
    • பணிகளையும் அலட்சியத்துடன் மேற்கொண்டு வரும் அலுவலர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுவில் கூறியுள்ளனர்.

    ஆறுமுகநேரி:

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கிளையின் சார்பில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காயல்பட்டினம் நகராட்சி மன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.

    நகரில் குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளை அகற்றி, தரமான புதிய தார் சாலைகளை அமைத்தல், செயல்படாமல் இருக்கும் பயோகாஸ் திட்டத்தை விரைவில் இயக்கி, அதன் மூலம் மின் உற்பத்தி செய்தல், குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனங்களை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வருதல், வார்டு மறுவரையறையில் நிலவும் குளறுபடிகளைச் திருத்தி அமைத்தல், நகரின் மக்கள்தொகைக்கு ஏற்ப வார்டுகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், 2-வது குடிநீர் திட்டத்தின் மூலம் சீரான குடிநீர் விநியோகத்தை ஏற்படுத்துதல். தெருவிளக்குகள் பராமரிப்பு, நகர்மன்றக் கூட்டங்களில் நகர பொதுமக்களைப் பார்வையாளர்களாக அனுமதித்தல், கடற்கரையில் உள்ள குப்பைகளை அகற்றி சுகாதாரமாகவும் பராமரித்தல், பல்லாண்டு காலமாக வெறும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிக் கொண்டு அனைத்துப் பணிகளையும் அலட்சியத்துடன் மேற்கொண்டு வரும் அலுவலர்களை இடமாற்றம் செய்தல், எதிர்வரும் மழைக்காலத்தைக் கருத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கைப் பணிகளை மேற்கொள்ளுதல் ஆகிய கோரிக்கைகள் மனுவில் இடம்பெற்றிருந்தன. இந்த மனுவை முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் முகமது அபூபக்கர் தலைமையில் நகர் மன்ற ஆணையாளர் சுகந்தி, நகர் மன்ற தலைவர் முத்து முகமது ஆகியோரிடம் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநிலத் துணைச் செயலாளர் இப்ராஹீம் மக்கீ, மாவட்டச் செயலாளர் மஹ்மூதுல் ஹசன், நகர தலைவர் நூவு சாகிப், செயலாளர் அபூ சாலிஹ், பொருளாளர் சுலைமான், மாவட்ட நிர்வாகிகளான மன்னர் பாதுல் அஸ்ஹப், அம்பா ஜாபர், முகம்மத் இஸ்மாயில் புகாரீ, சித்தீக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×