என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊத்தங்கரை தாசில்தார் அலுவலகத்தில் வீட்டு மனை பட்டா கேட்டு மனு கொடுத்த பெண்கள்.
வீட்டுமனை பட்டா கேட்டு மனு
- நாங்கள் பரம்பரையாக 100 வருடங்களுக்கு மேலாக அப்பகுதியில் குடியிருந்து வருகிறோம்.
- பிள்ளைகளுக்கு திருமணமானதால், ஒரே வீட்டில் இரண்டு மற்றும் மூன்று குடும்பங்கள் வசித்து வருகிறோம்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, மாரம்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட மாரம்பட்டி, நாப்பிரா ம்பட்டி, மாரங்கொட்டாய், வசந்தபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 100 -க்கும் மேற்பட்ட பொதுமக்கள், ஊத்தங்கரை தாசில்தார் அலுவலகத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு, தலைமையிடத்து துணை தாசில்தார் ஜெயபாலிடம் நேற்று மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
நாங்கள் பரம்பரையாக 100 வருடங்களுக்கு மேலாக அப்பகுதியில் குடியிருந்து வருகிறோம். பிள்ளைகளுக்கு திருமணமானதால், ஒரே வீட்டில் இரண்டு மற்றும் மூன்று குடும்பங்கள் வசித்து வருகிறோம்.
போதிய இட வசதி இல்லாமல் குழந்தைகளுடன் தவித்து வருகிறோம். கல்லாங்குத்து அரசு புறம்போக்கு நிலத்தில், வீட்டுமனை பட்டா ஒதுக்கி, அரசு தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும் என பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மனுக்களை பெற்ற துணை தாசில்தார் ஜெயபால் மனு மீது உரிய நடநவடிக்கை எடுப்பதாக கூறினார்.