search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வளாக நேர்காணலில் 370 மாணவர்களுக்கு பணிநியமன ஆணை
    X

    வளாக நேர்காணலில் 370 மாணவர்களுக்கு பணிநியமன ஆணை

    • வளாக நேர்காணலில் 370 மாணவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது
    • தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரியில்

    பெரம்பலூர்:

    தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் ஆசியுடன் தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரியில் வருடந்தோறும் சிறந்த பன்னாட்டு நிறுவனங்கள் வரவழைக்கப்பட்டு 100 சதவீத வேலைவாய்ப்பு மாணவ, மாணவியர்களுக்கு பெற்றுதருவதை முதல் கடமையாக கொண்டு இயங்கிவருகிறது.

    இந்த கல்வி ஆண்டிலும் இக்கல்லூரி மனிதவள மேம்பாட்டுத்துறை மூலமாக அண்மையில் நடத்திய வளாக நேர்காணல்களில் 22 நிறுவனங்கள் வரவழைக்கப்பட்டன.

    இறுதியாண்டு பயிலும் 370 மாணவ மாணவியர்களுக்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் பணிநியமன ஆணைகளை வழங்கியதோடு, அனைவரும் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் சிறந்து வேலை செய்பவர்களாக திகழ்ந்து விரைவில் தொழில்முனைவோராக மாறி மற்றவர்களுக்கு உங்கள் நிறுவனத்தில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டும் என்று வாழ்த்தினார்.

    வரவிருக்கும் நாட்களில் இன்னும் 15 - க்கும் மேற்பட்ட கம்பெனிகள் வளாக நேர்காணலில் பங்குபெற இருப்பதால், இதில் மற்ற கல்லூரி மாணவர்களும் பங்கேற்று பயன்பெறலாம் என்றும் தெரிவித்தார்.

    இந்நிகழ்வில் தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர், துறைத்தலைவர்கள், வேலைவாய்ப்பு அலுவலர், மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் உடனிருந்தனர்

    Next Story
    ×