என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் குறித்து நியாய விலைக்கடை விற்பனையாளர்களுக்கான ஆய்வு கூட்டம்
    X

    பெண்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் குறித்து நியாய விலைக்கடை விற்பனையாளர்களுக்கான ஆய்வு கூட்டம்

    • பெண்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் குறித்து நியாய விலைக்கடை விற்பனையாளர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது
    • பெரம்பலூர் கலெக்டர் தலைமையில் நடந்தது

    பெரம்பலூர்,

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துவது குறித்து கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மற்றும் நியாய விலைக்கடை விற்பனையாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் க.கற்பகம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசும்போது, இத்திட்டத்தின் விண்ணப்ப படிவங்களை நியாயவிலைக் கடைகளின் பணியாளர்கள் தங்கள் கடைக்கு உட்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு வீடாகச் சென்று குடும்பத்தலைவிகளிடம் வழங்கி ஒப்புகை பெற வேண்டும்.

    வீட்டில் குடும்பத்தலைவிகள் இல்லை என்றால் 18 வயது பூர்த்தியடைந்த நபர்களிடம் வழங்கி ஒப்புகை பெற வேண்டும். விண்ணப்பங்களை வழங்கும்போதே, அவற்றை பூர்த்தி செய்து திரும்ப வழங்குவதற்கு அமைக்கப்படவுள்ள சிறப்பு முகாம்கள் குறித்தும், எந்த நாளில் எந்த நேரத்தில் குடும்பத்தலைவிகள் சிறப்பு முகாமிற்கு வரவேண்டும் என்பது குறித்தும் அவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் டோக்கன் வழங்கிட வேண்டும். பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ள 282 நியாயவிலைக்கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் முகாம்கள் நடத்த உகந்த வகையில் உள்ள சமுதாய க்கூடங்கள், பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    குறித்த நாட்களில் முகாமிற்கு உரிய நாளில் வர இயலாத குடும்பத்தலைவிகள் முகாம் நடைபெறும் கடைசி 2 நாட்களில் விண்ணப்பங்களை வழங்கலாம். முகாமிற்கு வரும் குடும்பத்தலைவிகள், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கிக்கணக்குப்புத்தகம், மின்சார வாரிய கட்டண ரசீது உள்ளிட்டவைகளை கொண்டுவரவேண்டும் என்ற விபரங்கள் உங்கள் நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களாக உள்ள அனைவருக்கும் தெளிவாக எடுத்துரைக்கப்பட வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

    இந்நிகழ்வில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்ப திவாளர்பா ண்டியன், மாவட்ட வழங்கல் அலுவலர் சத்திய பாலகங்காதரன், துணை ப்பதிவாளர் இளஞ்செல்வி மற்றும் அனைத்து நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்கள், கூட்டுறவுத்துறை அலு வலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×