என் மலர்
உள்ளூர் செய்திகள்

இஸ்லாமியர்கள் சிறப்பு பிரார்த்தனை
- இஸ்லாமியர்கள் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது
- மொகரம் பண்டிகையையொட்டி நடந்தது
பெரம்பலூர்
இஸ்லாமியர்கள் நாள்காட்டியின் முதல் மாதமான மொகரம் மாதத்தின் 10-வது நாள் ஆஸுரா நாளாக இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்கள் வரலாற்றில் மிக முக்கியமான வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வுகள் மொகரம் 10-ம் நாளில் நிகழ்ந்ததால் இந்த நாளை சிறப்பு மிக்க நாளாக இஸ்லாமியர்கள் பெரும்பாலானோர் கொண்டாடுகின்றனர். இதன்படி ஆஸுரா தினமான நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் பெரும்பாலானோர் நோன்பிருந்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். சில மசூதிகளில் ஆஸுா தினம் குறித்த சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெற்றன.
Next Story






