என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கொள்ளிட பாலத்தில் மண்குவியல் அகற்றம்
  X

  கொள்ளிட பாலத்தில் மண்குவியல் அகற்றம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கொள்ளிட பாலத்தில் மண்குவியல் அகற்றப்பட்டது
  • மாலைமலர் செய்தி எதிரொலியால் நடைபெற்றது

  பெரம்பலூர்:

  பெரம்பலூர்-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில், அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலம் உள்ளது. இதில் 1.3 கி.மீட்டர் நீளமுள்ள இந்த பாலத்தை தாங்கி நிற்க 24 தூண்கள் உள்ளன. இதில் இரண்டு தூண்களுக்கும் நடுவில் இணைக்கும் வகையில் ரப்பர் பொருத்தப்பட்டது. தஞ்சை மாவட்டத்தை இணைக்கும் முக்கிய பாலமான இந்த பாலத்தில் பல வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் பாலத்தின் இருபுறங்களிலும் மணல் குவியல்கள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளின் கண்களில் விழுவதால், விபத்துக்கள் நடைபெற்று வந்தன. இதனை அகற்ற பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை மாலை மலர் நாளிதழில் வெளியானது.

  இதனை தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக பாலத்தின் இருபுறங்களிலும் உள்ள மண் குவியலை அகற்ற நடவடிக்கை எடுத்தனர். இதனால் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைவதுடன், மாலைமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

  Next Story
  ×